குஜராத்தில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

குஜராத்தில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

குஜராத்தில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு
Published on

குஜராத்தில் நாளை வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில் நான்கு தொகுதிகளில் உள்ள ஆறு வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

விரம்கம், மற்றும் சவில் தொகுதிகளில் தலா இரண்டு வாக்குசாவடிகளிலும், வட்கம் மற்றும் தஸ்ரோய் தொகுதிகளில் தலா ஒரு வாக்குசாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனினும் என்ன காரணத்திற்காக இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை. 7 தொகுதிகளில் உள்ள 10 வாக்குச்சாவடிகளில் சோதனை ரீதியாக பதிவு செய்யப்பட்ட வாக்குகளை வாக்குப்பதிவு இயந்திரத்திலிருந்து அழிக்க தேர்தல் அதிகாரிகள் தவறிவிட்டதால் அங்கு அச்சடிக்கப்பட்ட வாக்கு சீட்டுகளை எண்ணும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே போல் ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது ஒரு வாக்குசாவடியில் அச்சடிக்கப்பட்ட வாக்குகள் மின்னணு வாக்குகளுடன் சரிபார்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் நாளை வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்தினுள் தேர்தல் பார்வையாளரை தவிர வேறு யாரும் செல்போனை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியின் செல்போன் மின்னணு முறையில் பெறப்பட்ட தபால் ஓட்டுகளை எண்ணுவதற்காக ஒருமுறை கடவுச் சொல்லை பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் பின்னர் அது அனைத்து வைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com