இந்தியா
271 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் - சீர்வரிசையுடன் மணமகனுக்கு தலைக்கவசம்
271 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் - சீர்வரிசையுடன் மணமகனுக்கு தலைக்கவசம்
குஜராத் மாநிலம் சூரத்தில், தொழிலதிபர் ஒருவர் 271 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
பல்வேறு சமூகத்தை சேர்ந்த, 271 பெண்களுக்கு சூரத் நகரைச் சேர்ந்த மகேஷ் சவானி என்ற தொழிலதிபர் பிரமாண்ட மைதானத்தில் ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இதில் இஸ்லாமிய ஜோடிகளும் தங்கள் சடங்குகளின்படி திருமணம் செய்து கொண்டனர்.
மணமுடித்து வைக்கப்பட்ட 271 ஜோடிகளுக்கும் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது. அத்துடன் மணமகனுக்கு ஹெல்மெட்டும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து புதுமணப்பெண் ஒருவர் கூறுகையில், “எனக்கு சகோதர சகோதரி என யாரும் கிடையாது. என் பெற்றோர் சாதாரண திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வை அமைப்பாளர்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துள்ளனர். என்னை ஆதரித்த என் தந்தைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

