“OTT தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயார்; விரைவில் அமலுக்கு வரும்” - மத்திய அரசு

“OTT தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயார்; விரைவில் அமலுக்கு வரும்” - மத்திய அரசு
“OTT தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயார்; விரைவில் அமலுக்கு வரும்” - மத்திய அரசு

OTT தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ், திரைப்படங்கள் மாதிரியான படைப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தயார் என்றும், விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் எனவும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனை செவ்வாயன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் அவர் தெரிவித்தார். 

கேள்வி நேரத்தின்போது பாஜக எம்.பி. மகேஷ் பொட்டார் OTT தளங்களில் வெளியாகும் படைப்புகளின் உள்ளடக்கம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதையடுத்தே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதை தெரிவித்தார். 

“ஓடிடி தளங்களில் வெளியாகும் சில தொடர்கள், படங்களுக்கு எதிராக ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. விரைவில் அதை அமலுக்கு வரும்” என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com