ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு: உணவுப்பொருட்கள் விலைகுறைய வாய்ப்பு

ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு: உணவுப்பொருட்கள் விலைகுறைய வாய்ப்பு

ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு: உணவுப்பொருட்கள் விலைகுறைய வாய்ப்பு
Published on

ஜூலை 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பால் பொருட்களுக்கு வரிவிதிப்பில் விலக்கு அளித்து, உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 1, 211 பொருட்களுக்கு வரி விதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அப்போது கோதுமை, அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
5, 12, 18 மற்றும் 28 சதவீதங்களில் நிர்ணயிக்கப்பட்ட இந்த ஜிஎஸ்டி வரி விகிதங்களில் அன்றாடம் பயன்படும் அத்தியாவசியப் பொருள்களான டீத்தூள், காப்பி தூள், சமையல் எண்ணெய் ஆகியவற்றிற்கு குறைந்தபட்சமாக 5 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது. உற்பத்தி பொருட்களுக்கு 18 சதவிகிதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆடம்பர கார்களுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி வரியும், செஸ் வரி 15 சதவிகிதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய ரக பெட்ரோல் கார்களுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி வரியுடன் செஸ் வரி 1 சதவிகிதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய வகை டீசல் கார்களுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி வரியும், 3 சதவிகித செஸ் வரியும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறுகையில், ஒட்டுமொத்த பொருட்களுக்கும் வரியை உயர்த்த முடிவு செய்யப்படவில்லை. பல பொருட்களுக்கான வரி விதிப்பு தற்போது இருப்பதை விட குறைய வாய்ப்பிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மூலதனப்பொருட்களுக்கான வரி விதிப்பு 28 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அன்றாடம், பயன்படுத்தப்படும் பொருட்களான ஹேர் ஆயில், டூத்பேஸ்ட், சோப்பு வகைகளுக்கான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் குறைக்கப்படுகிறது. அதேவேளை குளிர்பானங்களின் விலை 28 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறை செயலாளர் ஹாஸ்முக் அதியா கூறுகையில், 81 சதவிகித பொருட்களுக்கு 18 சதவிகிதத்திற்கு குறைவாகவே வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 சதவிகித பொருட்களின் விலை மட்டுமே 28 சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக அதிக அள்வில் உணவுப்பொருட்களுக்கான வரி மிகவும் குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com