ஜிஎஸ்டி எதிரொலி : விலை குறையும் வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ், டிவி

ஜிஎஸ்டி எதிரொலி : விலை குறையும் வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ், டிவி
ஜிஎஸ்டி எதிரொலி : விலை குறையும் வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ், டிவி

ஜிஎஸ்டி வரிக்குறைப்பை தொடர்ந்து டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது

வாஷிங்மெஷின், ரெஃப்ரிஜிரேட்டர், மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட பொருட்களுக்கு 7% முதல் 8% வரை விலையை குறைத்துள்ளதாக கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்சார சிக்கனம் தரும் ஏர் கண்டிஷனர் இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் கோத்ரெஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக சாம்சங் நிறுவனமும் தனது டிவி, ரெஃப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின் ஆகிய பொருட்களுக்கு 8% வரை விலை குறைத்துள்ளதாக தெரிவித்திருந்தது. இதேபோன்று மற்ற நிறுவனங்களும் விலைக்குறைப்பை அறிவிக்கும் எனத் தெரிகிறது. அண்மையில் டிவி, வாஷிங்மெஷின் போன்ற வீட்டுஉபயோக பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18% குறைக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com