அடுக்குமாடி குடியிருப்புக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைப்பு

அடுக்குமாடி குடியிருப்புக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைப்பு
அடுக்குமாடி குடியிருப்புக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைப்பு

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போதே வாங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மலிவு விலை குடியிருப்புகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 8 சதவீத ஜி.எஸ்.டி. வரி ஒரு சதவீதமாக குறைப்பட உள்ளது. 

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜி.எஸ்.டி. வரிகுறைப்பு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அருண் ஜெட்லி இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சலுகை மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை குறைவதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com