உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!

உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்த மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. 

பல பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மாற்றம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம் இதோ! 

  • ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டிருந்த பிராண்டு(முத்திரை) இல்லாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்க கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • முத்திரையில்லாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் இறைச்சி, மீன், தயிர், பன்னீர், உலர் பருப்பு வகை காய்கறிகள், கோதுமை, பட்டாணி மாவு, வெல்லம் போன்ற பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • அதேநேரம், பொட்டலமிடப்படாத முத்திரையற்ற பொருள்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஹோட்டல்களில் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வாடகை உள்ள அறைகளுக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • காசோலைகளுக்கு வங்கி விதிக்கும் கட்டணத்தில் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அட்லஸ் வரைபடம், விளக்கப்படங்களுக்கு 12 சதவிகிதமும் ஜிஎஸ்டி விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • எல்.இ.டி விளக்குகள், கத்தி மீதான ஜிஎஸ்டி வரி 12%லிருந்து 18%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  • சூரிய சக்தியில் தண்ணீர் சுட வைக்கும் இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி 5%லிருந்து 12%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  • மாவு அரைக்கும் கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி 5%லிருந்து 18%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  • தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 18%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்க குழுவுக்கு அவகாசம் அளித்து இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com