அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு நாளை முதல் ஜிஎஸ்டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை?

அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு நாளை முதல் ஜிஎஸ்டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை?
அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு நாளை முதல் ஜிஎஸ்டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை?

அரிசி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீது ஜிஎஸ்டி அதிகரிப்பு நாளை அமலுக்கு வருகிறது. எந்தெந்த பொருட்கள் விலை உயரும், குறையும் எனப் பார்க்கலாம்.

கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, 5 சதவிகித வரி விதிப்பால், பிராண்ட் அல்லாத அரிசி, கோதுமை மாவு, தயிர், பன்னீர் ஆகியவற்றின் விலை உயரும்.

உலக வரைபடமான அட்லஸ், CHART, வரைபடங்கள் 12 சதவிகித வரிவிதிப்பால் விலை உயரும். ஓட்டல் அறையின் தினசரி வாடகை 1,000 ரூபாய்க்குள் இருந்தால் 12 சதவிகித வரி விதிப்பால், வாடகை அதிகரிக்கும். TETRA PACK எனப்படும் காகித அடைப்பான் பானங்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக உயர்வால் அவற்றின் விலை உயரும்.

வங்கிகள் காசோலை புத்தகம் வழங்க 18 சதவிகித வரிப் பிடித்தம் செய்யப்படும். அச்சு, எழுது மை, மார்க்கர், கத்தி, பிளேடு, பென்சில் ஷார்ப்னர், எல்இடி விளக்கு ஆகியவற்றின் ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்வதால் அவற்றின் விலை அதிகரிக்கும். சூரியசக்தி ஹீட்டர் மீதான வரி 5இல் இருந்து 12 சதவிகிதமாவதால் அதன் விலை உயரும்.

சாலை, பாலம், ரயில்வே, மெட்ரோ,மயானங்களில் பணி ஒப்பந்தங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்வால், அவற்றின் சேவைக் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. லாரி மற்றும் சரக்கு வாகனங்களுக்கான வாடகை மீதான ஜிஎஸ்டி 18 சதவிகித்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைப்பால், அவற்றின் வாடகை குறைய வாய்ப்புள்ளது. பேட்டரி பொருத்தப்பட்ட மின்சார வாகனத்திற்கான 5 சதவிகித ஜிஎஸ்டி முற்றிலும் விலக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com