ஜிஎஸ்டி பற்றி இப்போது வரை புரியவில்லை : பாஜக அமைச்சர் பேச்சு

ஜிஎஸ்டி பற்றி இப்போது வரை புரியவில்லை : பாஜக அமைச்சர் பேச்சு

ஜிஎஸ்டி பற்றி இப்போது வரை புரியவில்லை : பாஜக அமைச்சர் பேச்சு
Published on

மத்தியப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே, ஜி.எஸ்.டியை இதுவரை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சர்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். 

போபாலில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே கலந்துக் கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ஜிஎஸ்டி எ‌னப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை தம்மால் இதுவரை புரிந்துகொள்ள இயலவில்லை என்று கூறினார். மேலும், ஜிஎஸ்டியை புரிந்துகொள்வதில் கணக்கு தணிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்குக் கூட சிரமம் இருப்பதாக சர்சைக்குரிய கருத்தை அவர் தெரிவித்தார். ஓம் பிரகாஷின் இத்தகைய பேச்சு, பாரதிய ஜனதா கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி குறித்து ஓம் பிரகாஷின் கருத்திற்கு கட்சித் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com