ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

சர்க்கரைக்கு கூடுதல் வரி விதிக்க தமிழகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டம் ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சர்க்கரைக்கு ஜி.எஸ்.டியுடன் கூடிய செஸ் வரி 3 ரூபாய் கூடுதலாக விதிக்க ஜி.எஸ்.டி கவுன்சில் ஒரு குழு அமைத்தது. அசாம் மாநில நிதியமைச்சர் ஹேமந்தா விஸ்வால் தலைமையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் உள்ளிட்‌ட 5 மாநில அமைச்சர்கள் இந்த குழுவில் நியமிக்கப்பட்டனர். இந்த வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வரி வருவாயை கொண்டு கரும்பு விவசாயிகளுக்கு, கரும்பு ஆலைகளுக்கும் உதவலாம் என முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 

‌அதில் சர்க்கரைக்கு கூடுதல் வரி விதிக்க தமிழகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சர்க்கரை மீது ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கூடுதல் வரி விதிப்பது சட்டப்படி செல்லுமா எனவும் தமிழக அரசு தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டது. இதனை அடுத்து சட்ட அமைச்சகம் மற்றும் உணவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி விவாதிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com