இந்தியா
ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் : வரி ஏய்ப்பு தடுப்பு குறித்து ஆலோசனை
ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் : வரி ஏய்ப்பு தடுப்பு குறித்து ஆலோசனை
ஜிஎஸ்டி கவுன்சிலின் 24வது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
காணொலி காட்சி முறையில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் ஜெட்லி தலைமை வகிக்கிறார். தலைநகரில் இருந்துக் கொண்டே நிதியமைச்சர் மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வரி ஏய்ப்புக்கான வழிகளை அடைப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 12 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ள நிலையில் அதற்கு வரி ஏய்ப்பே காரணம் என அரசு கருதுகிறது. மேலும் வருவாய் குறைப்பு மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது,
இந்நிலையில் இந்த பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கவுஹாத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் 178 பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.