ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக சமையல் எரிவாயு விலை ரூ.14.50 அதிகரித்துள்ளது.
மத்திய அரசு கடந்த 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய முறையால் சில பொருட்கள் மீதான வரி அதிகரித்துள்ளதால் விலையும் அதிகமாகியுள்ளது. இதில் சமையல் சமையல் எரிவாயுவும் அடங்கும்.
தமிழகத்தில் சமையல் எரிவாயு மீதான மதிப்புக்கூட்டு வரியை ஜெயலலிதா ரத்து செய்திருந்தார். இதனால் சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.560-க்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிலிண்டரின் விலை ரூ.574.50 ஆக உயர்ந்துள்ளது.