நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3

நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3
நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து நாளை மாலை 5.28-க்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது

இதற்கான 25 மணி நேர கவுன்டவுன் இன்று பிற்பகல் 3.58 மணிக்கு துவங்குகிறது. இந்த ராக்கெட் ஜிசாட் 19 என்ற 3,136 கிலோ எடை கொண்ட இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோளை தாங்கிச் செல்ல உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் இணையதள வேகத்தையும் மிக அதிக அளவில் உயர்த்துவதுடன், விண்வெளிக்கு மனிதர்களையும் அனுப்ப முடியும்.

ஜிஎஸ்எல்வி குறித்து சில தகவல்கள்:

1.ஜிஎஸ்எல்வி மார்க் 3, 300 கோடி ரூபாய் செலவில், 15 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டது.

2.எதிர்காலத்தில், இந்த ராக்கெட் இந்திய விண்வெளி நிபுணர்களை விண்ணிற்கு அழைத்துச் செல்லும்.

3.மத்திய அரசிடமிருந்து 12,500 கோடியை இதற்காக கேட்கவுள்ளது இஸ்ரோ. மத்திய அரசு, இதற்கு ஒப்புதல் அளித்தால், இஸ்ரோ 7 வருடங்கள் கழித்து இந்திய விண்வெளி வீரர்களை விண்ணிற்கு அனுப்பும்.

4.இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்படவிருக்கும் முதல் விண்வெளி வீரர் ஒரு பெண்ணாக இருக்கவேண்டும் என இஸ்ரோ பரிந்துரைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com