வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோள் !

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோள் !
வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது ஜிசாட்- 6ஏ  செயற்கைக்கோள் !

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து இன்று மாலை 4.56 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் பூமியில் இருந்து புறப்பட்ட 17 நிமிஷம் 46 நொடிகளில் விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை சுமந்துச் செல்லவுள்ள ஜி.எஸ்.எல்.வி.- எஃப்08 ராக்கெட் , ஜி.எஸ்.எல்.வி. வரிசையில் 12 ஆவது ராக்கெட்டாகும். ஜி.எஸ்.எல்.வி எஃப் 08 ராக்கெட் விண்ணில் செலுத்தியது மூலம் இதுவரை 8 முறை வெற்றிகரமாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்தி, திட்டமிட்ட பாதையில் செயற்கைக்கோளை இஸ்ரோ நிலைநிறுத்தியுள்ளது. இந்த முயற்சியில் 4 முறை மட்டும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தோல்வியில் முடிந்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 8-ஆவது வெற்றியைப் இஸ்ரோ விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். இந்த ராக்கெட்டின் மொத்தம் 415.6 டன் எடையும், 49.1 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இந்த ராக்கெட்டில் ஜிசாட்-6ஏ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-6 செயற்கைக்கோளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள். இது பன்முனை எஸ்பாண்ட், ஒருமுனை சி-பாண்ட் அலைவரிசைகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்தச் செயற்கைக்கோள் உதவ உள்ளது.

ஜிசாட் பயன்கள் என்ன ? 

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் ஜிசாட் (ஜியோசின்கிரோனஸ் செயற்கைகோள்) செயற்கைகோள்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிக எடை கொண்ட இந்தச் செயற்கைகோளை உருவாக்கக்கூடிய நாடுகளால் அவற்றை விண்ணுக்கு ஏவும் ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியவில்லை. பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை 40-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பத்தில் திறமை பெற்றிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் இது சவாலாகவே இருந்தது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் மூலமே, இது போன்ற அதிக எடைகொண்ட செயற்கைகோள்களை விண்ணில் ஏவ முடியும். ஆனால், அதில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குத் தர, அந்தத் தொழில்நுட்பத்தைப் பெற்றிருந்த நாடுகள் மறுத்தன. எனினும், ஏற்கெனவே இஸ்ரோ வைத்திருந்த ரஷ்ய என்ஜின்களைக் கொண்டு, 2001-ஆம் ஆண்டு ஏப்ரல் 18- ஆம் தேதி முதல் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. அதன் பிறகு, கிரையோஜெனிக் என்ஜின்களை முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கி, ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com