63 பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை - குஜராத் அதிர்ச்சி !
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 63 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி ஆகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. குஜராத் செகண்டரி மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் இந்தத் தேர்வினை நடத்தியது. இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
8 லட்சத்து 22 ஆயிரத்து 823 பேர் தேர்வு எழுதியதில், 5 லட்சத்து 51 ஆயிரத்து 23 பேர் தேர்ச்சி ஆகியுள்ளதாக தேர்வு வாரிய தலைவர் ஷா தெரிவித்துள்ளார். தேர்ச்சி சதவீதம் 66.97. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 67.5 ஆக இருந்தது. பெண்கள் 72.64 சதவீதமும், ஆண்கள் 62.83 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தேர்வில் சுமார் 63 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், 366 பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.