’’சம்பளம் இல்லை’’ மேனேஜர் நம்பரை கேட்ட டிரைவரை கொடூரமாக தாக்கிய பெண்கள் - வைரலாகும் வீடியோ

’’சம்பளம் இல்லை’’ மேனேஜர் நம்பரை கேட்ட டிரைவரை கொடூரமாக தாக்கிய பெண்கள் - வைரலாகும் வீடியோ
’’சம்பளம் இல்லை’’ மேனேஜர் நம்பரை கேட்ட டிரைவரை கொடூரமாக தாக்கிய பெண்கள் - வைரலாகும் வீடியோ

ராய்ப்பூர் விமான நிலையத்தின் வெளியே பெண்கள் கூட்டம் ஒரு இளைஞரை இரக்கமற்ற முறையில் கொடூரமாக அடித்து தாக்கும் வீடியோ இணையங்களில் வைரலாக பரவிவருகிறது.

ராய்ப்பூர் சுவாமி விவேகானந்தா சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை வேடிக்கைப் பார்த்த நபர்களில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், பணத் தகராறு காரணமாக மிகவும் கோபமாக இருக்கும் பெண் ஒருவர் ஒரு ஆணை பெல்ட்டால் அடிப்பதும், தொடர்ந்து பலமுறை கன்னத்தில் அறைவதும், குத்துவதும் பதிவாகி இருக்கிறது. மேலும் அந்த பெண்கள், அவர்களிடமிருந்து தப்பியோட முயற்சித்த அந்த இளைஞரின் சட்டையைக் கிழிப்பதும் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் ராய்ப்பூர் நகர மானா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் பெயர் தினேஷ் என உள்ளூர் மீடியாக்கள் குறிப்பிட்டுள்ளன. தினேஷ் ராகுல் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில் ஆட்டோ டாக்ஸி டிரைவராக வேலை செய்துவருகிறார். அவர் போலீசில் அளித்துள்ள புகாரில், தான் டிராவல் நிறுவனத்திற்காக நிறைய வேலை செய்ததாகவும், ஆனால் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தனது சம்பளத்தை கேட்க நிறுவன அலுவலகத்திற்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் மோசமாக நடந்ததுடன், சண்டையிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

#Raipur #AAI @aairprairport @RaipurPoliceCG

What is happening in the airport, where is the security of airport....? Really shameless some girls are beating one person freely...?

Hopefully Raipur Police will take strict action against such incident. pic.twitter.com/wxQcn1G3cC
— Chandrashekhar Dewangan (@chandrak0809) September 18, 2022

தினேஷ், நிறுவன மேனேஜர் நம்பரை கேட்டபோது, அங்கிருந்த பெண்கள் கூட்டம் தன்னை அடித்து தாக்கி மோசமாக திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுகுறித்த வீடியோ இணையங்களில் வைரலானதை அடுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொண்ட பெண்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தினேஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com