திருமண வரவேற்பில் டான்ஸ்: மணமகன் திடீர் மரணம்!

திருமண வரவேற்பில் டான்ஸ்: மணமகன் திடீர் மரணம்!

திருமண வரவேற்பில் டான்ஸ்: மணமகன் திடீர் மரணம்!
Published on

திருமண வரவேற்பின்போது நடனமாடிய மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் கைமூர் பகுதியில் சசிகாந்த் பாண்டே என்பவரின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண வரவேற்பின்போது, காரில் வந்த மணமகனை இறக்கி தங்களுடன் நடனமாடும்படி, நண்பர்கள் கூறியதையடுத்து, மணமகன் ஆடத்தொடங்கினார். இதையடுத்து, சிறிது நேரத்தில் மணமகன் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பாண்டேவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திருமண வீடு துக்க வீடாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com