நவ.30 வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா?: பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

நவ.30 வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா?: பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
நவ.30 வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா?: பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

நவம்பர் 7 முதல் 30 ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதைத் தடை செய்யலாமா எனக்கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வருகிற 14 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனிடையே டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வருவதால் பட்டாசுக்கு தடைவிதிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நவம்பர் 7 முதல் 30 ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதைத் தடை செய்யலாமா எனக்கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்குமாறு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com