“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி”- சுஷ்மா ஸ்வராஜ்

“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி”- சுஷ்மா ஸ்வராஜ்
“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி”- சுஷ்மா ஸ்வராஜ்

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், ஈரானில் இருந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவி இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரை அந்நாட்டு ராணுவம் கைது செய்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தான் தனது தீர்ப்பை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், “ குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமனதாக வரவேற்கிறேன். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. அத்துடன் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவிற்கும் நன்றி. இந்த தீர்ப்பு குல்பூஷண் ஜாதவின் குடும்பத்திற்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com