இந்தியா
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: 6 மாதத்திற்கு பின் ஒருவர் கைது
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: 6 மாதத்திற்கு பின் ஒருவர் கைது
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் நவீன் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
55 வயதான கவுரி வலதுசாரிக் கருத்துக்களைக் கடுமையாக எதிர்த்து வந்தவர்.பத்திரிகையாளர் மட்டுமின்றி சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் திகழ்ந்த கவுரி லங்கேஷ் மதவாதத்திற்கு எதிரான தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர் ஆவார். இவ்வழக்கில் ஆறு மாதத்திற்கு பின் நவீன் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புள்ளவராக கருதப்படும் நவீன் குமாரை காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர். இவரை 7 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.