பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படுகிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பெட்ரோல் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்கள் அல்லாத தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர். அதன்படி, தொடர் நஷ்டத்தை சந்தித்து வரும் அரசு தொலைபேசி நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை ஒன்றிணைக்கப்படுகிறது. மேலும், இந்த நிறுவனத்துக்கு 4ஜி உரிமம் வழங்கப்படும் என்ற அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிறுவனத்தை மீட்பதற்காக மத்திய அரசு 29 ஆயிரத்து 937 கோடி ரூபாய் வழங்கும் என்றார்.
இதுதவிர டெல்லியில், புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களுக்கு நில உரிமை வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், சுமார் 40 லட்சம் பேர் பயனடைவர் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மேலும், பெட்ரோல் டீசல் விற்பனையில், எண்ணெய் நிறுவனங்கள் அல்லாத தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.