ஆன்லைன் தளங்களை பயன்படுத்துவோரை கண்காணிக்க தயாராகும் அரசு..!

ஆன்லைன் தளங்களை பயன்படுத்துவோரை கண்காணிக்க தயாராகும் அரசு..!
ஆன்லைன் தளங்களை பயன்படுத்துவோரை கண்காணிக்க தயாராகும் அரசு..!

ஆன்லைனில் சட்டவிரோதமாக உள்ள தகவல்களை பெறும்பொருட்டு தகவல் தொழில்நுட்ப விதியில் திருத்தங்களை கொண்டுவர அரசு பரிந்தரை செய்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் பாதுகாத்து வைத்திருக்கும் தகவல்கள் மற்றும் பரிமாறப்படும் தகவல்களைக் கண்காணிப்பது, அந்தத் தகவல்களை இடைமறித்து ஆய்வு செய்வது, தடை செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள மத்திய அரசின் 10 விசாரணை முகமைகளுக்கு உள்துறை அமைச்சகம் அண்மையில் அதிகாரம் அளித்தது. அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் தேச பாதுகாப்பு நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார்.

தற்போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை குறிவைத்துள்ளது மத்திய அரசு. அதாவது ஆன்லைன் தளங்களில் சட்டவிரோதமாக உள்ள தகவல்களை பெறும்பொருட்டு தகவல் தொழில்நுட்ப விதி பிரிவு 79-ன் கீழ் மாற்றங்கள் கொண்டுவர அரசு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சட்டவிரோத தகவல்கள் இருக்குமேயானால் அதனை கண்டுபிடிக்க ஏதுவாக தொழில்நுட்பத்தை விரிவாக்க ஆன்லைன் தளங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சட்டவிரோத தகவல்களை கண்டுபிடித்து நீக்கவும், முடக்கவும் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளன.

தற்போது 50 லட்சத்திற்கும் மேலானோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களிடம் ஏதாவது பாதுகாப்பு காரணங்களுக்காக தகவல்கள் கேட்கப்பட்டால் அவர்கள் 72 மணி நேரத்திற்குள் பாதுகாப்பு அமைப்பிடம் தகவல்களை அளிக்க வேண்டும். அந்த வகையில் ஐடி விதியில் மாற்றம் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள், கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், அமேசான், யாகூ, ட்விட்டர் மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் சங்க பிரிதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஜனவரி 7-ஆம் தேதிக்குள் அவர்கள் பதில் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவியதன் மூலம் வட மாநிலங்களில் தொடர்ச்சியாக கும்பல் தாக்குதல் அதிரித்து வந்தது. அதனை கட்டுப்படுத்த அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com