”அரசுப் பள்ளிகளில் குறையும் மாணவர் சேர்க்கை” - மத்திய அரசு அறிக்கை
இந்தியாவில் 2014-15 முதல் 2024-25 வரை பள்ளிகளும் மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் கணிசமாகச் சுருங்கி, தனியார் சுயநிதிப் பள்ளிகள் அதிகரித்துள்ளன.
இந்தியாவில் மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 2014-15ஆம் கல்வி ஆண்டில் 15 லட்சத்து 16 ஆயிரமாக இருந்தது. 2024-25-இல் இது 14 லட்சத்து 71 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2014-15-இல் 11 லட்சத்து 7 ஆயிரமாக இருந்தது, 2024-25-இல் 10 லட்சத்து 13 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
அதே சமயம் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 88 ஆயிரத்திலிருந்து 3 லட்சத்து 39 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
2014-15இல் மாணவர் சேர்க்கை 26 கோடியே 95 லட்சமாக இருந்தது. 2024-25இல் 24 கோடியே 69 லட்சமாகக் குறைந்துவிட்டது.
2022-23இல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 13 கோடியே 62 லட்சமாக இருந்தது. 2024-25இல் அது 12 கோடியே 16 லட்சமாக சரிந்துள்ளது. இதே காலகட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 8 கோடியே 42 லட்சத்திலிருந்து 9 கோடியே 59 லட்சமாக அதிகரித்துள்ளது.
இன்னொருபுறம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருந்தாலும் ஆசிரியர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2014-15இல் 80 லட்சத்து 84 ஆயிரமாக இருந்த ஆசிரியர் எண்ணிக்கை 2024-25இல் ஒரு கோடியே ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது

