நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக.9 வரை நீட்டிப்பு?

நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக.9 வரை நீட்டிப்பு?
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக.9 வரை நீட்டிப்பு?

நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 26ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், மேலும் புதிதாக 25 சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தவும், அதுதொடர்பாக விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்‌றன. முன்னதாக, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், பங்கேற்ற பிரதமர் மோடி, மேலும் சில நாட்களுக்கு கூட்டத் தொடர் நீட்டிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், பிரல்ஹத் ஜோஷி கூறும்போது, ‘’நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நீட்டிப்புக்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படியொரு முடிவெடுத்தால் முறையாக தெரிவிக்கப்படும்’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com