"அரசின் சீர்திருத்தங்கள் மூலமாக விவசாயிகளுக்கு உதவுகிறோம்!" - பிரதமர் மோடி

"அரசின் சீர்திருத்தங்கள் மூலமாக விவசாயிகளுக்கு உதவுகிறோம்!" - பிரதமர் மோடி

"அரசின் சீர்திருத்தங்கள் மூலமாக விவசாயிகளுக்கு உதவுகிறோம்!" - பிரதமர் மோடி
Published on

விவசாயிகளுக்கு புதிய சட்டங்கள் மூலமும், சீர்திருத்தங்கள் மூலமும் மத்திய அரசு பாதுகாப்பாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியத் தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 93வது ஆண்டு பொதுக் கூட்டம் மற்றும் வருடாந்திர மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுத் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர் "வேளாண் உள்கட்டமைப்பு, உணவுப் பதப்படுத்துதல், சேமிப்பு அல்லது குளிர்பதன கிடங்கு என விவசாயத் துறைக்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற துறைகளுக்கும் இடையில் இருந்த இடற்பாடுகள் இப்போது களையப்பட்டு இருக்கிறது.

விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கூடுதல் சந்தை வசதிகளைப் பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தங்களுக்குப் பிறகு, விவசாயிகளுக்கு புதிய சந்தைகள், விருப்பத் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அதிக நன்மை கிடைக்கும்" என்றார்.

மேலும் "விவசாயிகளைக் காப்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. புதியக் கொள்கைகள், சீர்திருத்தங்கள் மூலமே அது சாத்தியப்படும். இப்போது கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டம் அதற்கான கதவுகள் விவசாயிகளுக்கு திறக்கப்பட்டுள்ளன" என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com