விவசாயிகளுடன் நாளை பேச்சுவார்த்தை இல்லை: டிச 30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

விவசாயிகளுடன் நாளை பேச்சுவார்த்தை இல்லை: டிச 30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
விவசாயிகளுடன் நாளை பேச்சுவார்த்தை இல்லை: டிச 30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

விவசாயசங்க பிரதிநிதிகளுடன் நாளை நடக்க இருந்த பேச்சுவார்த்தை டிச 30-ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி எல்லையில் பஞ்சாப்,ஹரியானா விவசாயிகள் கடந்த 33-வது நாளாக போராடி வருகின்றனர். முன்னதாக மத்திய அரசுடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை. 

இந்நிலையில் அண்மையில் விவசாயிகள், மத்திய அரசுடன் 6-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் எனவும் அரசு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும் எனக் கூறினர். இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையானது நாளை நடைபெற இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்தப் பேச்சுவார்த்தையானது வருகின்ற 30-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com