\
பிப். 28க்குள் வங்கிக் கணக்குடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும்.. மத்திய அரசு அறிவுறுத்தல்

பிப். 28க்குள் வங்கிக் கணக்குடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும்.. மத்திய அரசு அறிவுறுத்தல்

பிப். 28க்குள் வங்கிக் கணக்குடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும்.. மத்திய அரசு அறிவுறுத்தல்
Published on

பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் பான் கார்டுகளை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் சார்பில் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், வங்கிக் கணக்குகளுடன் பான் கார்டு எண்ணினை பிப்ரவரி 28க்குள் இணைக்க வேண்டும். பான் கணக்கு எண் இல்லாதவர்களிடம் படிவம் எண் 60ஐ பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ஜன்தன் கணக்குகள் மற்றும் பூஜ்யம் இருப்புத் தொகை கொண்ட வங்கிக் கணக்குகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com