ஸ்டெர்லைட் பகுதியை சுற்றியுள்ள நிலத்தடி நீரில் மாசு? - மத்திய அரசு அறிக்கை

ஸ்டெர்லைட் பகுதியை சுற்றியுள்ள நிலத்தடி நீரில் மாசு? - மத்திய அரசு அறிக்கை
ஸ்டெர்லைட் பகுதியை சுற்றியுள்ள நிலத்தடி நீரில் மாசு? - மத்திய அரசு அறிக்கை

மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா, ‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளால், அதனை சுற்றிலும் உள்ள நிலத்தடி நீர் மாசுபாடு அடைந்துள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ள நிலையில், அதுதொடர்பாக அரசுத் தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா?’ எனக் கேள்வி எழுப்பினார். 

ஒருவேளை ஆய்வு செய்திருந்தால் அது தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அப்படி செய்யவில்லை எனில், ஆய்வு செய்வதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?  என்றும் மத்திய அரசு தானாக முன்வந்து ஆய்வு செய்யுமா? என்றும் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பினார்.

சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு, மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர், அர்ஜுன் ராம் மெஹ்வால் நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். 

அதில், “மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடியில் உள்ள சிப்காட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளது(சிப்காட் பகுதியில் தான் ஸ்டெர்லைட் உள்ளது). அந்த ஆய்வில் சிப்காட் பகுதிகளில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் குடிநீருக்கான இந்திய தரநிர்ணய ஆணையம் அனுமதித்த அளவைவிட ஈயம், காட்மியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, ஆர்சினிக் உள்ளிட்ட உலோகங்கள் காணப்படுவதாக காட்டுகின்றன. 

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தகவல்களின் படி, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், ஸ்டெர்லைட் ஆலைப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளை சோதனை செய்ததில் இந்திய தரநிர்ணய ஆணையம் அனுமதித்த  அளவைவிட இரும்பு, ஈயம், காட்மியம் மற்றும் நிக்கல் கூடுதலாக உள்ளது தெரியவந்துள்ளது.

தொழிற்சாலை மாசுபாடுகளை சட்டவிதிகளின் படி மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. விதிமுறைகளை உரிய வகையில் கடைபிடிக்காத காரணத்தினால் தான் ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் மூடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com