இந்தியா
மக்களின் 13 ஆயிரம் கோடி பணத்தை அரசு திருடுகிறது: ப.சிதம்பரம் காட்டம்
மக்களின் 13 ஆயிரம் கோடி பணத்தை அரசு திருடுகிறது: ப.சிதம்பரம் காட்டம்
மக்களின் 13 ஆயிரம் கோடி பணத்தை அரசு திருடுகிறது என ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், “ எரிபொருள் விலையில் ஒரு ரூபாய் குறைப்பதினால் சுமார் ரூ.13,000 கோடி இழப்பு ஏற்படுவதாக அரசு கூறுகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இதனைக் காண்பது தவறு. சரியாக இதனை எப்படி பார்க்கவேண்டுமென்றால் ஒவ்வொரு முறையும் நியாயமற்ற முறையில் உயர்த்தப்படும் எரிபொருள் விலை மூலம் மக்களின் ரூ.13,000 கோடி பணத்தை அரசு திருடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு முதல் தினந்தோறும் மாற்றப்பட்டு வருகிறது. எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன. கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்துள்ளனர்.