ஆளுநர் ஹிந்தியில் பேசினால் கேட்க முடியாது: மேகாலயா எதிர்க்கட்சி வெளிநடப்பு

ஆளுநர் ஹிந்தியில் பேசினால் கேட்க முடியாது: மேகாலயா எதிர்க்கட்சி வெளிநடப்பு
ஆளுநர்  ஹிந்தியில் பேசினால் கேட்க முடியாது: மேகாலயா எதிர்க்கட்சி வெளிநடப்பு

ஆளுநர் ஹிந்தியில்தான் பேசுவேன் என அடம்பிடிக்கவே மேகாலயா எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஹிந்தி எதிர்ப்பு மாநிலமாக தமிழகத்தையே பலரும் அடையாளப்படுத்துவார்கள். ஆனால் வடகிழக்கு மாநிலங்களிலும் ஹிந்தி எதிர்ப்பு தொடர்ந்து இருக்கிறது. பெரும்பாலும் வடகிழக்கு மாநில மக்கள் தங்கள் உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். இடம்பெயர்வதால் மெல்ல மெல்ல ஹிந்தி பேச, புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் முழுமையாக இல்லை.

இந்நிலையில் பாஜகவோடு இணைந்து தேசிய மக்கள் கட்சி மேகாலயாவில் ஆட்சி அமைத்துள்ளது. அதனை அடுத்து சட்டமன்ற முதல் கூட்டம் ஆளுநர் உரையோடு தொடங்கியது. அப்போது ஆளுநர் கங்கா பிரசாத் தனது உரையை ஹிந்தியில் தொடங்கினார். உடனே ஒரு பெண் எழுந்து உரையை நிறுத்துமாறு கத்த தொடங்கினார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார். ஹிந்தியில் எல்லாம் இங்கே பேசக் கூடாது , எங்களுடைய மொழியான் காசி மொழியில் பேசுங்கள் என்றார்.

யார் அந்த பெண்? அவர் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ. அம்பரீன் லிங்க்தோ; ஆளுநர் ஹிந்தியில்தான் பேசுவேன் என அடம்பிடிக்கவே அவர் வெளிநடப்பு செய்தார்.அவருக்கு ஆதரவாக மற்ற எதிர்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஏன் ஹிந்தியில் பேச வேண்டாம் என்கிறீர்கள் என லிங்க்தோவை பார்த்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது பதிலளித்த அவர், காசி அல்லது காரோ மொழியே இங்கு பெரும்பான்மை மக்கள் பேசக் கூடிய மொழி ஆனால் ஆளுநரோ யாருக்கும் புரியாத மொழியில் பேசுகிறார் என்றார்.

எந்த மொழியில் பேச வேண்டும் என்பதை முடிவு செய்ய ஆளுநருக்கு அதிகாரமிருந்தால், ஹிந்தியில் பேசுவதை கேட்க வேண்டாமென முடிவு செய்ய எனக்கும் உரிமை உண்டு ; புரியாத ஒன்றை அவர் பேசும் போது, நான் வெளியே வந்ததில் தவறில்லை என்றார் லிங்க்தோ. அவருக்கு ஆதரவாக எதிர்கட்சி தலைவர் முகுல் சங்மாவும் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் , பத்திரிகையாளர்களை சந்தித்த முதலமைச்சர் சங்மா , ஆளுநருக்கு ஹிந்தியில் பேசுவதுதான் எளிதாக இருக்கிறது , அதனால் அவர் பேசுகிறார் ; உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயமில்லை என்றார். அதோடு ஹிந்தி ஒன்றும் வெளிநாட்டி மொழியில்லை என்பதால் ஆளுநர் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com