கொரோனா பரிசோதனை முடிவை பலரிடம் சொல்ல தொலைபேசி பதிவேடுகளை பயன்படுத்தியதா அரசு?

கொரோனா பரிசோதனை முடிவை பலரிடம் சொல்ல தொலைபேசி பதிவேடுகளை பயன்படுத்தியதா அரசு?
கொரோனா பரிசோதனை முடிவை பலரிடம் சொல்ல தொலைபேசி பதிவேடுகளை பயன்படுத்தியதா அரசு?

‘எனது கொரோனா பரிசோதனை முடிவை என் நண்பர்களிடம் சொல்ல அரசு எனது தொலைபேசி அழைப்பின் பதிவேடுகளை பயன்படுத்தியது’ என கர்நாடக அரசு மீது குற்றம் சாட்டும் இளைஞர் 

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அதற்கு காரணம் இந்தியாவில் அதிகளவிலான பரிசோதனை செய்யப்படுவது தான் என அரசு சொல்லி வரும் நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட 30 வயது நபரின் பரிசோதனை முடிவை அவரது நண்பர்களிடம் சொல்ல அந்த நபரின் தொலைபேசி அழைப்பு பதிவுகளை பயன்படுத்தியுள்ளதாக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார் அவர்.

கர்நாடகாவின் தேவனகேரி பகுதியை சேர்ந்த அவர் தெரிவித்துள்ளதாவது“ஜூலை 18ஆம் தேதியன்று நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனையின் போது எனது சுய விவரங்கள் அனைத்தையும் சுகாதார துறை அதிகாரிகளிடம் கொடுத்திருந்தேன். இந்த சூழலில் ஜூலை 23ஆம் தேதியன்று எனது பரிசோதனை முடிவை என் தொலைபேசி அழைப்பின் பதிவேடுகளை பயன்படுத்தி எனது நான்கு நண்பர்களுக்கு அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் எனக்கு போன் செய்து கொரோனா வைரஸினால் நான் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். 

ஆனால்  இதுவரை எனது பரிசோதனை முடிவு என்ன என்பது அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார் அவர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com