சீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு

சீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு
சீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு

இந்திய - சீன எல்‌லையில் 21 ஆயிரம் கோடி‌ ரூபாய் செலவில்‌‌ 44 நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக மத்திய பொதுப்பணி துறை ஆண்டு அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவும் சீனாவும் 4000 கிலோமீட்டர்கள் எல்லை பகுதியை பகிர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த எல்லை பகுதி ஜம்மு காஷ்மீரில் தொடங்கி அருணாசலப்பிரதேசம் வரை நீண்டுயிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்தியா சீனா இடையேயான டோக்லாம் எல்லை பகுதியில் பிரச்சனை ஏற்பட்டது. இந்த எல்லை பிரச்சனை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் எல்லை பாதுப்பையை அதிகரிக்கும் விதத்தில் 44 சாலைகளை 5‌ மாநிலங்களின் வழியே அமைக்கப்ப‌டவுள்ளது. இந்த சாலைகள் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கீம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே இருக்கும். கடந்த ஆண்டு இந்திய எல்லைக்கு அருகே‌ சீன எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை அ‌‌மைக்கும் பணியில் சீனா ஈடு‌பட்டது. 

இதை தொடர்ந்தே இந்தியா தனது பாதுகாப்பு உறுதிப்படுத்தும் விதமாக‌ சாலை அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.‌‌ மத்திய‌ அமைச்சரவையின் அனுமதிக்கு பிறகு பணிகள் தொடங்கும் எ‌ன எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com