தாஜ்மஹாலை பார்வையிட புதிய கட்டுப்பாடுகள்

தாஜ்மஹாலை பார்வையிட புதிய கட்டுப்பாடுகள்

தாஜ்மஹாலை பார்வையிட புதிய கட்டுப்பாடுகள்
Published on

இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட‌ உள்ளன.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ‘தாஜ்மஹால்’ காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. முகாலய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ்க்கு காதல் பரிசாக இதை கட்டினார். இதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் இருந்தாலும் முகாலய கட்டகலையின் சிறந்த படைப்பாக இது பார்க்கப்படுகிறது. தாஜ்மகாலை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர்.

இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட‌ உள்ளன. இதன் படி ஒரு நாளைக்கு 40 ஆயிர‌ம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே தாஜ்மகாலின் அழகை ரசிக்க அனுமதிக்கப்படுவர். 40 ஆயிரம் டிக்கெட்டுகளுடன் முன்பதிவு நிறுத்தப்படும். தாஜ்மகாலை பராமரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 20 ஆம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. ஆனால் வெளிநாட்டவருக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com