தெளிவா எழுதிக்கொடுங்க டாக்டர் சார்... மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு!
மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நோயாளிகளுக்கு பரிந்துரைச் சீட்டில் தெளிவாக, பெரிய எழுத்தில் எழுத வேண்டும் எனவும், கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோயுற்றவர்களுக்கு எழுதிக் கொடுக்கும் பரிந்துரைச் சீட்டில் பெரிய எழுத்தில் தெளிவாக எழுதிக் கொடுக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில். மருத்துவர்களின் கையெழுத்து தெளிவாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மருந்துச் சீட்டுகளில் பொதுவானமருந்துகளை மட்டுமே பரிந்துரைப்பதை உறுதிப்படுத்தவும் ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்கான உரிமை என்ற அடிப்படையில், நோயாளிகளுக்குத் தரமான மற்றும் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்வதே இந்த உத்தரவின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

