மகாராஷ்டிராவில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மகாராஷ்டிராவில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
மகாராஷ்டிராவில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மகாராஷ்டிராவில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927ஆக உயர்வு. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109ஆக உயர்வு. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,872ஆக உயர்வு.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 7,088ஆக உயர்வு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,135ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மகாராஷ்டிராவில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவது கடைபிடிக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடியவுள்ள நிலையில் மகாராஷ்டிரா, ஊரடங்கை நீட்டித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com