மேகதாது அணை: கர்நாடக முதலமைச்சர் அடுத்தக்கட்ட நடவடிக்கை

மேகதாது அணை: கர்நாடக முதலமைச்சர் அடுத்தக்கட்ட நடவடிக்கை

மேகதாது அணை: கர்நாடக முதலமைச்சர் அடுத்தக்கட்ட நடவடிக்கை
Published on

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடக அரசு ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க கர்நாடக மாநில அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் டெல்லி சென்று மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் தருமாறு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து வலியுறுத்தப்போவதாகவும் கூறினார். இதனிடையே, மேகதாது அணை விவகாரத்தை இருமாநில பிரச்னை என மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது என முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com