போரிடும் ஆற்றலை மேம்படுத்த ராணுவத்தில் சீர்திருத்தம்: மத்திய அரசு

போரிடும் ஆற்றலை மேம்படுத்த ராணுவத்தில் சீர்திருத்தம்: மத்திய அரசு

போரிடும் ஆற்றலை மேம்படுத்த ராணுவத்தில் சீர்திருத்தம்: மத்திய அரசு
Published on

இந்திய ராணுவத்தின் போரிடும் ஆற்றலை மேம்படுத்த பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்றபிறகு முதல்முறையாக இதுபோன்ற ஒரு சீர்திருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

ராணுவம் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி டிபி ஷெகத்கர் தலைமையிலான குழு 99 பரிந்துரைகளை அளித்துள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இவற்றில் 65 பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த பரிந்துரைகளை அமல்படுத்தும் பணி தொடங்கிவிட்டதாகவும், அவை 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. ஷெகத்கர் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டு அது தனது பரிந்துரைகளை டிசம்பர் மாதத்தில் அளித்திருந்தது. சீர்திருத்தங்களின் முதல் கட்ட்மாக சுமார் 57,000 அதிகாரிகள், வீரர்கள் மற்றும் சாதாரண ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது. போரிடும் ஆற்றலை மேம்படுத்தவும், செயல் திறனை அதிகரிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com