ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்ட இருக்கும் ஜி.எஸ்.டியின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு தேசம், ஒரு வரி என்பதை அடிப்படையாகக் கொண்டு, ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன்படி ஜி.எஸ்.டி சீர்திருத்தம் தொடர்பான அம்சங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கலால் மற்றும் சுங்கத்துறை, நடிகர் அமிதாப் பச்சனை விளம்பரத் தூதராக நியமித்துள்ளது. அமிதாப் பச்சன் தோன்றி உரையாற்றும், 40 விநாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவில், ’தேசியக் கொடியில் மூன்று வண்ணங்கள் இருப்பதைப் போலவே, ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை என்னும் மூன்று வண்ணங்களை ஜி.எஸ்.டி கொண்டு வரும்’ என்று அமிதாப் விளக்குகிறார்.