\
Government Bans Telegram Until June 22 Ahead of NEET Re-Test
டெலிகிராம்X

ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்குத் தடை.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.. காரணம் என்ன?

நீட் மறுதேர்வுக்கு முன்னதாக நடைபெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Published on

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை ஆண்டு தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திவருகிறது. அதன்படி, 2026-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே-3 ம் தேதி நாடுமுழுவதும் நடைபெற்றது. இதில், 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதியிருந்தனர். இந்த சூழலில்தான், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தான் மாநில மாணவர்களிடையே வழங்கப்பட்ட வினா விடை வங்கியில் நீட் தேர்வு வினாத்தாளின் பெரும்பாலான கேள்விகள் இருந்தது சந்தேகங்களை எழுப்பியது. இதையடுத்து, பலரும் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டி வருந்தனர்.

National Testing Agency Scraps May 3 NEET Examination
நீட் தேர்வு ரத்துPt web

இதைத் தொடர்ந்து, மே 12-ம் தேதி தேசிய தேர்வு முகைமை வெளியிட்ட அறிவிப்பில், முறைகேடு புகார்களை அடுத்து மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்துசெய்வதாகவும், இதற்கான மறுதேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தது. அதன்படி, நீட் மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்படவிருக்கிறது.

Government Bans Telegram Until June 22 Ahead of NEET Re-Test
தமிழ்நாட்டின் நிதி நிலை என்ன? இன்று வெளியாகிறது வெள்ளை அறிக்கை!

இந்தசூழலில் தான், வினாத்தாள் கசிவைத் தடுக்கும் ஒரு பகுதியாக, நீட் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலியை தடை செய்ய வேண்டும் என தேசிய தேர்வு முகைமை மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியிருந்தது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000- பிரிவு 69A-ன் கீழ் டெலிகிராம் செயலியை ஜூன் 22-ம் தேதி வரை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டெலிகிராம் செயலியின் மூலமே பெரும்பாலும் வினாத்தாள் கசிவதாக எழுந்த புகாரையெடுத்தே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Government Bans Telegram Until June 22 Ahead of NEET Re-Test
கிரெடிட் கார்டு மூலம் லாபம்.. ஆண்டுக்கு ரூ.50,000 சேமிப்பு.. SECRET சொல்லும் எழுத்தாளர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com