\
வேட்புமனு தாக்கல் செய்தார் கோபாலகிருஷ்ண காந்தி

வேட்புமனு தாக்கல் செய்தார் கோபாலகிருஷ்ண காந்தி

வேட்புமனு தாக்கல் செய்தார் கோபாலகிருஷ்ண காந்தி
Published on

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம்(ஆகஸ்ட்) 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி நாடாளுமன்ற மாநிலங்களவை செயலாளர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் இடதுசாரி தலைவர்கள், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வெங்கய்யா நாயுடுவும் இன்று டெல்லியில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com