\
”நாரதரின் லேட்டஸ்ட் வர்ஷன்தான் கூகுள்” குஜராத் முதல்வர்

”நாரதரின் லேட்டஸ்ட் வர்ஷன்தான் கூகுள்” குஜராத் முதல்வர்

”நாரதரின் லேட்டஸ்ட் வர்ஷன்தான் கூகுள்” குஜராத் முதல்வர்
Published on

குஜராத் மாநிலத்தில் "நாரதர் ஜெயந்தி" விழா நேற்று கோலகலமாக கொண்டாப்பட்டது. இந்த விழாவை விஷ்வ சம்வத கேந்திரா என்ற ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பு நடத்தியது. இந்த விழாவுக்கு அம்மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் ருபானி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

அந்த விழாவில் பேசிய விஜய் ருபானி " இந்து மத புராணத்தில் நாரதருக்கு அனைத்து விஷயங்களும் தெரியும். இவ்வுலகின் அனைத்து நிகழ்வுகளையும் விரல் நுனியில் வைத்திருப்பார் நாரதர். அதுபோலதான் கூகுளும். இப்போது உலகத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் கூகுள் தேடுதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். புராணக் கதைகளில் நாரதர் அனைத்து விஷயங்களையும் தெரிந்துக்கொண்டு, தர்மத்தை நிலை நாட்டவும், மனித குளத்தை வழிநடத்தவும் பயன்படுத்தினார். ஆகையால் தகவல்களை தருவதில் புராணக் காலங்களில் நாரதரும், கூகுளும் ஒன்று” என்றார் விஜய் ருபானி.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com