தொடரும் தற்கொலைகள்: பிளே ஸ்டோரிலிருந்து லோன் அப்ளிகேஷன்களை நீக்கியது கூகுள்!

தொடரும் தற்கொலைகள்: பிளே ஸ்டோரிலிருந்து லோன் அப்ளிகேஷன்களை நீக்கியது கூகுள்!
தொடரும் தற்கொலைகள்: பிளே ஸ்டோரிலிருந்து லோன் அப்ளிகேஷன்களை நீக்கியது கூகுள்!

இன்றைய டிஜிட்டல் உலகில் மனிதனின் அனைத்து தேவைகளும் மிக சுலபமாக விரல் நுனியில் அடங்கிவிடுகிறது. சமயங்களில் அது சுகமாகவும், சில சமயங்களில் அது சங்கடமாகவும் கூட அமைகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் டிஜிட்டல் முறையில் ஒருவரின் KYCயை மட்டும் அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் விரைவாக கடன் கொடுக்கும் வழக்கம் அண்மைய நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் கடன் வாங்கியவர்களை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் காட்டுகின்ற அடாவடி தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வருவதாகவும் இணையத்தில் புகார்கள் பறக்கின்றன. 

அதையடுத்து பயனர்களின் பாதுகாப்பு கொள்கையை மீறிய தனிநபர் கடன் கொடுக்கும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது. இதற்காக பயனர்கள் மற்றும் அரசு ஏஜென்சிகள் தேவையில்லாத அப்ளிகேஷன் என Flag செய்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை கூகுள் பரிசீலனை செய்துள்ளது. 

ஹைதராபாத்தில் மொபைல் போன் அப்ளிகேஷன் மூலம் கடன் வாங்கியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கையை கூகுள் மேற்கொண்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com