சம இரவு நாளை வரவேற்கும் விதமாக சிறப்பு டூடுளை வெளியிட்டது கூகுள் !

சம இரவு நாளை வரவேற்கும் விதமாக சிறப்பு டூடுளை வெளியிட்டது கூகுள் !

சம இரவு நாளை வரவேற்கும் விதமாக சிறப்பு டூடுளை வெளியிட்டது கூகுள் !
Published on

சம இரவு நாளை வரவேற்கும் விதமாக சிறப்பு டூடுள் வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது

பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள், முக்கிய தினங்களை சிறப்பு டூடுள் மூலம் சிறப்பிப்பது வழக்கம். அதன்படி இன்று சம இரவு நாளை வரவேற்கும் விதமாக சிறப்பு டூடுள் வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது. வசந்த கால சம இரவு நாள் தொடங்குவதனை கொண்டாடும் வகையில் அதனை சிறப்பிக்கும் விதமாக கூகுள் தளத்தின் இன்றைய டூடுல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் வெளியிட்டு அந்த சிறப்பு டூடுள், இன்று பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இரவு மற்றும் பகல் என இரண்டும் துல்லியமாக இருக்கும் படி அமைந்துள்ளது. மேலும் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய வானியல் நிகழ்வுகளில் இவையும் ஒன்று. அதனால் இன்று தொடங்கும் இந்த சம இரவு நாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com