AIக்காக செலவு செய்யும் 4 நிறுவனங்கள்.. இந்திய பட்ஜெட்டை விட அதிகம்.. தொகை எவ்வளவு தெரியுமா?
நமது மத்திய அரசு முழு நாட்டிற்கும் செலவிடும் $670 பில்லியன் தொகையை, AIக்காக, சில நிறுவனங்கள் செலவு செய்ய முன்வந்துள்ளன. குறிப்பாக, கூகுள், மெட்டா, அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள்தான் இத்தகைய தொகையை செலவிட தயாராக உள்ளன. இந்தப் பணத்தின் பெரும்பகுதி, சாட்பாட்கள் முதல் நெட்வொர்க்கிங் உபகரணங்கள் உள்ளிட்ட AI உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தார். அதன்படி, மத்திய அரசு முழு நாட்டிற்கும் அதன் மொத்த செலவினத்தை சுமார் $670 பில்லியன் என நிர்ணயித்துள்ளது. ஆனால், 2026ஆம் ஆண்டில் AI மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஒரு சில தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமே 650 பில்லியன் டாலர்களை செலவிட உள்ளன. இது அதிகமாகும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, கூகுள், மெட்டா, அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள்தான் இத்தகைய தொகையை செலவிட தயாராக உள்ளன. நமது மத்திய அரசு முழு நாட்டிற்கும் செலவிடும் தொகையை AIக்காக, இந்த நிறுவனங்கள் செலவு செய்கின்றன. இந்தப் பணத்தின் பெரும்பகுதி, சாட்பாட்கள் முதல் நெட்வொர்க்கிங் உபகரணங்கள் உள்ளிட்ட AI உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், அந்த நிறுவனங்கள் வரவிருக்கும் செலவுகளையும் குறிப்பிட்டுள்ளனர்.
கூகுள் சில நாட்களுக்கு முன்பு 2026ஆம் ஆண்டிற்கான அதன் செலவு சுமார் $185 பில்லியன் என்று கூறியது. அதற்குப் பிறகு அமேசான் $200 பில்லியன் எனவும், மெட்டா $135 பில்லியன் எனவும், மைக்ரோசாப்ட் $120 பில்லியன் எனவும் தெரிவித்திருந்தன. இதில், அமேசானே அதிக செலவு செய்யும் நிறுவனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் அதன் மூலதனச் செலவு சுமார் $200 பில்லியனை எட்டும் என்று நிறுவனம் முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக செலவு செய்தாலும், இந்த ஆண்டு அது இன்னும் அதிகரித்துள்ளன. தொழில்நுட்பத் துறையில் இத்தகைய முதலீடு என்பது அதன் வளர்ச்சிக்கும் முன்னணியில் இருப்பதற்குமான சவாலாகப் பார்க்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ள நிலையில், Ai உள்கட்டமைப்பில் அதிக பணம் செலவழிப்பதும் குறிப்பிடத்தக்கது.

