சென்னையில் தங்கம் வரலாறு காணாத விலை ஏற்றம்!

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் தங்கம் ஒரு சவரன் 5 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம் கண்டுவருகிறது. இதில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் ஒரு சவரன் 5 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 45 ரூபாய் விலை உயர்ந்து 6,545 ரூபாய்க்கும், ஒரு சவரன் 360 ரூபாய் விலை அதிகரித்து 52,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் 30 காசுகள் விலை ஏற்றம் கண்டு 85 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது.

தங்கநகை
தங்கநகைPT

கடந்த 5 வாரங்களில் தங்கம் சவரனுக்கு 5,640 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது. அமெரிக்க மைய வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க கடன்பத்திரங்கள் வலுவாக இருப்பது, சர்வதேச அளவில் நிகழும் போர் பதற்றங்கள் போன்றவையே தங்கம் விலை அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.

 ஆபரணத் தங்கம்
கோடீஸ்வரர்கள் பட்டியல் | இந்தியளவில் No 1-ஆக முகேஷ் அம்பானி.. உலக பட்டியலில் புதிதாக 25 இந்தியர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com