சுள்ளென்று சுடும் தங்கம் விலை.. வரலாறு காணாத விலை ஏற்றம்; சவரன் ஒன்றுக்கு ரூபாய் 51,640க்கு விற்பனை!

தங்கம் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து வெள்ளியும் கிராம் ஒன்றுக்கு 0.60 அதிகரித்து 81.60 விற்பனையாகிறது.
தங்கம்
தங்கம் pt

இன்று தங்கத்தின் விலை பவுன் ஒன்று ரூபாய் 51,640க்கு விற்பனையாகிறது

இன்று மறுபடியும் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 22 கேரட் தங்கத்தின் விலையானது பவுன் ரூபாய் 50,000 கடந்த நிலையில், இன்று மேலும் 680 ரூபாய் அதிகரித்து. ஒரு சவரன் ரூபாய் 51,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து வெள்ளியும் கிராம் ஒன்றுக்கு 0.60 அதிகரித்து 81.60 விற்பனையாகிறது.

தங்கம்
ரூ.50,000ஐ தொட்ட ஒரு சவரன் தங்கம் - அதிர்ச்சியில் சாமானிய மக்கள்! விலை உயர்வுக்கு இதுதான் காரணமா?

விலை ஏற்றத்திற்கு என்ன காரணம்?

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு காரணம் அமெரிக்காவில் பணவீக்க விகிதம் குறைந்து வரும் நிலையில் அந்நாட்டு மையவங்கி வரும் ஜூன் மாதத்தில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கின்ற நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் தங்கம் கடந்து வந்த பாதை

மார்ச் 26 ஒரு சவரன் ரூ. 49,760

மார்ச் 27 ஒரு சவரன் ரூ. 49,720

மார்ச் 28, ஒரு சவரன் ரூ.50,000

மார்ச் 29, ஒரு சவரன் ரூ. 51,120

மார்ச் 30 ஒரு சவரன் ரூ. 50,960

மார்ச் 31 ஒரு சவரன் ரூ. 50,960

ஏப்ரல் 01 ஒரு சவரன் ரூ.51,640 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com