2024ல் புதிய உச்சத்தில் தங்கம் விலை! உயர்வுக்கு காரணங்கள் என்ன? 2025-ல் மேலும் அதிகரிக்குமா?
இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சித்தரக்கூடிய செய்தி. எனவே, எப்போது விலை குறையும் எப்பொழுது தங்கத்தை வாங்கலாம் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர்.
ஆனால், 2024-ல் இதுவரை இல்லாத அளவிற்கு தங்கம் விலை ஆனது 30% அதிகரித்துள்ளது. அதாவது பத்து கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 20,000 வரை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 24 காரட் தங்கத்தின் விலையானது 58500 இருந்தது. ஆனால் தற்பொழுது 78,800 ஐ தாண்டியுள்ளது.
உயர்வுக்கு பல காரணம் என்ன?
சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்ற பல காரணிகள் தங்கத்தின் விலையை அதிகரிக்கக் காணப்படுகின்றன.
தங்கம் விலை விவகாரம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. தங்கம் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததா? என உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்தார்.
“மத்திய அரசு ஏற்கனவே 2024-25 மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்துள்ளது. தங்கம் விலை உயர்வை அரசு கண்காணித்து வருகிறது. தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தங்கத்திற்கு மானியம் வழங்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று கூறியுள்ளார்.
24000 டன் தங்கம் இந்தியாவில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது இது அமெரிக்காவைக்காட்டிலும் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு ஜெயின்திலால் சலானி கூறியதைப்பார்க்கலாம்
உலக தங்க கவுன்சில் இந்தியாவில் 24000 டன் நகை இருப்பதாக சொல்கிறார்கள் .. ஆனால் 30 ஆயிரம் டன் அளவிற்கு தங்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது..
தமிழக அரசிடம் கோயில்களில் ஆயிரம் கிலோ தங்கம் இருக்கிறது. கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோயிலில் பல டன் தங்கம் உள்ளது. இது இன்னமும் கணக்கிடப் படாமல் இருக்கிறது இதையெல்லாம் சேர்த்தால் அதிகமாக இருக்கும்..
அமெரிக்காவில் மக்களிடம் தங்கம் குறைவாக இருக்கிறது. அரசிடம் தங்கம் அதிகமாக இருக்கிறது அதனால் தான் அங்கு பொருளாதாரம் சீராக இருக்கிறது அவர்கள் நாட்டு டாலருக்கு நல்ல மதிப்பு இருக்கிறது.
இந்தியாவில் முகலாயர்கள் ஆட்சி காலம் மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே தங்கத்தை அணிகலனாக அணிவிக்கும் பழக்கம் இருப்பதால் இந்தியாவில் தங்கம் அதிகமாக இருப்பதற்கான காரணம்..
ஆனால் இந்தியாவில் மக்களிடம் அதிக அளவில் தங்கம் இருக்கிறது அரசிடம் தங்கம் குறைவாக இருப்பதால்தான் ரூபாயின் மதிப்பு குறைந்து இருக்கிறது...
தங்கத்தின் விலை இன்னும் 20 நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்கும் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு மார்ச் மாதம் மீண்டும் ஒரு உச்சத்தை தங்கம் அடையும்..” என்று கூறியுள்ளார்.