தங்கத்தில்‘ஆயுர்வேதிக் பேஸ்ட்’: நூதனக் கடத்தல்

தங்கத்தில்‘ஆயுர்வேதிக் பேஸ்ட்’: நூதனக் கடத்தல்

தங்கத்தில்‘ஆயுர்வேதிக் பேஸ்ட்’: நூதனக் கடத்தல்
Published on

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கத்தை பேஸ்ட் ஆக்கி கடத்த முயன்றவரை சுங்கத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். 

தெலங்கானா மாநிலம் செம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், இன்று காலை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக மதுரையிலிருந்து ஹைதராபாத் வந்த ஒரு பயணியை சோதனை செய்தனர். அவரிடம் எந்தவித சந்தேகப்படும்படியான பொருட்கள் இல்லாததால், அவரது பையை சோதனை செய்தனர். பையில் ஆயுர்வேத மருந்து என்ற பெயரில் பார்சல் இருந்தது. அதனை சந்தேகத்தின் பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீயில் உருக்கினர். 

தீயில் உருக்கியபோது அது ஆயுர்வேத மருந்து இல்லை என்பதும், தங்கத்தை பொடி செய்து பேஸ்டாக்கி கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 1850 கிராம் கொண்ட தங்க பேஸ்ட்டை உருக்கியது மூலம் 1,120 கிராம் எடை கொண்ட தங்கம் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு 34 லட்சத்து 57 ஆயிரத்து 606 ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இதே போன்று தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இலங்கை வழியாக மதுரை கொண்டுவரப்பட்டு, மதுரையிலிருந்து இந்தியாவின் பல்வேறு நாடுகளுக்கு இதுபோன்று கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com