kerala
keralaputhiyathalaimurai

நிலச்சரிவு பகுதியில் சிதறிக் கிடந்த தங்க நகைகள்!

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Published on

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வயநாடு நிலச்சரிவில் உறவுகள், உடைமைகளை இழந்து பலர் தவித்து வருகின்றனர். அட்டமலை, மேப்பாடி, சூரல் மலை பகுதிகளில் இருந்த வீடுகள், காட்டாற்று வெள்ளத்தோடு ஏற்பட்ட நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன.

மண்ணோடு மண்ணாக புதைந்த பலரையும், வீடுகளையும் தேடும் பணி 5 ஆவது நாளாக தொடர்கிறது. உடல்களை தேடிச் சென்ற இடங்களில் ஆங்காங்கே மக்கள் அணிந்திருந்த தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டன.

kerala
கோரப்பசியை தீர்த்துக்கொண்ட நிலச்சரிவு.. சொந்த செலவில் உணவளித்து வரும் அன்னதான பிரபுக்கள்!

தங்க வளையல், செயின், மோதிரம் போன்ற தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டு, அவற்றை கணக்கிடும் பணியில் கேரள காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவற்றை உரியவரிடம் ஒப்படைக்கும் முயற்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com