‘கோல்டு காரி’ ஸ்வீட்... ஒரு கிலோ இவ்வளவு விலையா?
குஜராத்தில் பிரபலமான கொண்டாடப்படும் விழா சாந்தி பாட்வோ. இந்த விழாவில் பிரத்யேகமாக காரி என்ற இனிப்பை எடுத்துக்கொள்வர். இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ள இந்த விழாவை முன்னிட்டு சூரத்தில் உள்ள ஷரத் பூர்ணிமா என்ற இனிப்புக்கடை ‘கோல்டு காரி’ என்ற தங்கம் பூசப்பட்ட காரி இனிப்பை விற்பனைக்கு வைத்துள்ளது.
ஆனால் இந்த இனிப்பை எல்லாரும் அவ்வளவு எளிதில் வாங்கிவிட முடியாது. காரணம், அதன் விலைதான். சாதாராண காரி இனிப்பு ஒரு கிலோ ரூ.660-ரூ.820 வரை கிடைக்கும். ஆனால் 1 கிலோ கோல்டு காரியின் விலை ரூ.9000.
இதுபற்றி கடையின் உரிமையாளர் ரோஹன், ‘’இந்த ஆண்டு நாங்கள் கோல்டு காரியை அறிமுகப்படுத்தி உள்ளோம். இது மிகவும் ஆரோக்கியமானது. ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியமான பயன்படுத்தப்படும் உலோகங்களில் ஒன்று தங்கம். இந்த இனிப்பை அறிமுகப்படுத்தி மூன்று நாட்கள் ஆகிறது. ஆனால் எதிர்பார்த்ததைவிட சற்றுக் குறைவாகத்தான் விற்பனையாகிறது. வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம்’’ என்கிறார்.